இரத்த அழுத்தத்தை எவ்வாறு அளவிடுவது?
இரத்த அழுத்தத்தை எவ்வாறு அளவிடுவது?

இரத்த அழுத்தத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் கருவி டிஜிட்டல் இரத்த அழுத்தமானி (ஸ்பிக்மோமானோமீட்டர்) என்று அழைக்கப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை அளவிடும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
- இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு முன் புகைபிடித்தல் மற்றும் மது/காஃபின் கலந்த பானங்களைத் தவிர்த்திருக்க வேண்டும்.
- இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு முன் சிறுநீர்ப்பை காலியாக இருப்பதை உறுதி செய்யவும்.
- மனஅழுத்தம் அல்லது வலி இருக்கும் போது இரத்த அழுத்தத்தை அளவிடக்கூடாது.
- இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு முன் குறைந்தது 5 நிமிடங்கள் அமைதியாக ஓய்வெடுக்க வேண்டும்.


